நம் நாட்டில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது பெண்களுக்கு 18ஆகவும், ஆண்களுக்கு 21ஆகவும் சட்டபூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கணவன் - மனைவிக்கு இடையே மூன்று வருட இடைவெளி சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில், பாரம்பரியமாக இந்திய சமுதாயத்தில், கணவன்-மனைவியின் வயதில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் இடைவெளி ஏற்றுக்கொள்ளத்தக்கது. சில நேரங்களில் இந்த இடைவெளி அதிகமாகவும் இருக்கும்.