திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான தர்ப்பகராஜ் பங்கேற்று தேர்தல் விழிப்புணர்வு பாதாகையில் கையொழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதனை தொடர்ந்து மேளதாளங்களுடன் நடைப்பெற்ற மயிலாட்டம், ஒயிலாட்ட கலைநிகழ்ச்சியில், தூய்மை பணியாளர்கள் குத்தாட்டம் போட்டனர்.
அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் தேர்தல் விழிப்புணர்வு கேக் வெட்டி அதனை பொதுமக்களுக்கு அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சந்தானம் உட்பட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.