திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில், இன்று (டிச.15) சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்த கூட்டத்தில் பக்தர்கள் பலர் சிக்கி தவிக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர். ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு பக்தர்கள் செல்வதால், பெண்கள், குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளானர். போலீசார் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.