துணை முதல்வர் ஆவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஆவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது. அவர் துணை முதல்வர் ஆவதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. ஆதவ் அர்ஜுனா கருத்து குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரே விளக்கம் தந்து விட்டார்" என்று கூறியுள்ளார்"