பெற்ற தாயை பள்ளத்தில் தள்ளி கொல்ல முயற்சி

86927பார்த்தது
குமரி மாவட்டம் ஆலங்கோடு அருகே சொத்து பிரச்சனையில் தாயாரை கழிவு நீர் குழிக்குள் தள்ளி தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மா (73). வயதான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் லாரன்ஸுக்கும், இளைய மகனுக்கும் இடையே சொத்து தகராறு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் பின்புறத்தில் குளித்துக்கொண்டிருந்த தாயார் வள்ளியம்மாவை அவரது மகன் லாரன்ஸ் கழிவு நீர் தேக்கி வைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த குழிக்குள் தள்ளி விட்டு தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி