கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய அவர், “நான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தாலும், எங்களுக்கு தலைமை ஆசிரியர் முதலமைச்சர்தான். அவரை பார்க்கச் செல்லும்போது பரீட்சைக்குச் செல்ல தயாராகும் மாணவர்களை போல்தான் நானும் தயாராகிச் செல்வேன். ஆனாலும், எங்களை விட பல செய்திகளை அவர் முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பார்” என்று கூறியுள்ளார்.