முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் பங்கர். இவர் சிகிச்சைக்குப் பின் தான் பெண்ணாக மாறியதாக கூறி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த சிகிச்சையின்போது வலிமையை இழந்தாலும் மகிழ்ச்சி அதிகரித்துள்ளது. உடல் மாற்றம் பெற்று, அதிருப்தி குறைந்துள்ளது என குறிப்பிட்டிருந்தார். 23 வயதான ஆர்யன் சமீபத்தில் ஹார்மோன் மாற்று சிகிச்சைக்குப் பின் தனது பெயரை அனயா என மாற்றியுள்ளார்.