உ.பி: நொய்டாவில் செக்டார் 76 பகுதியில் செல்போன் டவரின் மீது ஏறி உச்சியில் நின்றபடி நடனமாடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது . தகவல் அறிந்து நேரில் வந்த மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அவரிடம் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கச் செய்தனர். அந்த நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராகக் காணப்பட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.