விஐடி சென்னையில் பட்டமளிப்பு விழா மற்றும் புதிய கட்டிடம் திறப்பு விழா நேற்று (ஆகஸ்ட் 17) நடந்தது. விழாவுக்கு பல்கலைகழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். விழாவில் மொத்தம் 3056 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். விசுவநாதன் பேசுகையில், “உயர் கல்வியில் மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் 27 சதவிகிதம் மட்டுமே. அது 50 சதவிகிதம் ஆக உயர வேண்டும். உண்மையான சுதந்திரம் கல்வி வாயிலாக மட்டுமே கிடைக்கும்." என்றார்.