‘திருச்சி மலைக்கோட்டை இப்போது திமுகவின் கோட்டை’ - கமல் பேச்சு

81பார்த்தது
திமுக கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக மார்ச்.29ஆம் தேதி ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டார். இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 2) திருச்சியில் பிரச்சாரத்திற்காக வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டெல்லி செங்கோட்டையை விட மூத்த கோட்டையான திருச்சி மலைக்கோட்டை இப்பொழுது திமுகவின் கோட்டையாக உள்ளது” என்றார்.

நன்றி: சன் நியூஸ்