அமெரிக்காவில் உள்ள உட்டா என்ற இடத்தில் ரயில்வே கேட் ஒன்றில், வாகனங்கள் சாதாரணமாகச் சென்றவண்ணம் இருக்கிறது. அப்போது அந்த வழியே ரயில் வருவதையொட்டி ரயில்வே கேட் போடப்பட்டது. இதை கவனிக்காத ஒரு கார் டிரைவர் ரயில்வே கேட் உள்ளே சென்றவுடன் கேட் மூடப்படுகிறது. உடனே சுதாரித்த அவர் காரை பின்னே எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் முடியவில்லை. இதனால் காரில் இருந்து விலகி ஓடிய நிலையில் ஹாரன் அடித்துக்கொண்டு வந்த ரயில் அந்த காரை அடித்து தூக்கியது.