நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நேற்று லக்னோவ் - டெல்லி இடையேயான ரயிலில் ஒரு பெட்டியில் தீ பரவியதாக யாரோ பொய் தகவலை பரப்பிவிட்டனர். இதனை நம்பி, அபாய சங்கிலியால் ரயிலை நிறுத்தி விட்டு இறங்கி தப்பிக்க முயன்ற பயணிகளில் 15க்கும் மேற்பட்டோர் எதிரில் வந்த பெங்களூரு ரயிலில் அடிபட்ட இறந்தனர். இந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். பொய் செய்தியை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.