பெரும் சோகம்: படகு கவிழ்ந்து 58 பேர் பலி (வீடியோ)

63பார்த்தது
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகர் பாங்குயிலில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகேலாவில் உள்ள கிராமத் தலைவரின் இறுதிச்சடங்கிற்கு 300 பேரை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது. தகவலறிந்து வந்த மீட்புத்துறையால் 58 உடல்களை மட்டுமே மீட்க முடிந்ததாக சிவில் பாதுகாப்புத்துறை தலைவர் தாமஸ் ஜிமாஸ்ஸே தெரிவித்தார். படகு உடைந்து விபத்து ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி