உத்தரப் பிரதேச மாநிலம் படாவுனில், இளம்பெண்ணை அவரது காதலன் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முஸ்கான் என்ற பெண்ணிற்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில், ரிஸ்வான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முஸ்கானை கொலை செய்து புதைத்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில், முஸ்கானுக்கு மாத மாதம் ரூ.10,000 கொடுத்து வந்ததாகவும், ஆனால், அப்பெண் ரூ.40,000 கேட்டு டார்ச்சர் செய்ததாகவும் தெரிகிறது. இதனால், ரிஸ்வான் அவரை கொலை செய்ததாக கூறியுள்ளார்.