சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு கட்கரி இவ்வாறு பதிலளித்தார். "சுங்கக் கட்டண வசூல் என்பது நிரந்தரமாக இருக்கும். சுங்க வசூல் தொடர்பாக எந்தவொரு தணிக்கையும் தேவையில்லை" என்றார்.