இன்றைய ராசிபலன் 03-10-2023

55672பார்த்தது
மேஷம்: இன்றைய நாளில் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றிகள் காத்திருக்கின்றன. தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று அதிக லாபம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் தீரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணத்திற்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். ரிஷபம்: இன்று உங்களுக்கு மிகவும் உயர்வான ஒரு நாள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்படும் எனவே உடல்நலத்தில் அக்கறையுடன் இருக்க வேண்டும். திருமண வாழ்க்கை திருப்திகரமாக உங்களுக்கு இன்று அமையும். அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும். வியாபாரிகள் வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து செல்வது நல்லது. மிதுனம்: இன்று உங்களுக்கு பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். புதிய வியாபாரத்தை இன்று தொடங்குதை தவிர்க்கவும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை வெளியூர் பயணங்கள் தவிர்க்க வேண்டும். கடினமான பணிகளையும் எளிதில் முடிப்பீர்கள். நண்பர்களிடம் இருந்த மனவருத்தம் நீங்கும். கணவன், மனைவி இடையே புரிதல், நெருக்கம் அதிகரிக்கும். கடகம்: இன்று முக்கியமான நபர்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். காதல் கைகூடவும் உங்களுக்கு வாய்ப்பு உண்டு. நெருப்பு சம்மந்தப்பட்ட பிரச்னைகள் சிலருக்கு வரும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சிம்மம்: வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கோவத்தை முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும். அலுவலகத்தில் அதிக வேலை காரணமாக மன அழுத்தம் ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். வயதில் மூத்தவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படும். ஆன்மீகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். கன்னி: இன்று மின்சாரம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பணம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் முனைவோருக்கு அதிக லாபம் கிடைக்கும். புதிய இடங்களுக்கு சென்று வருவீர்கள். சிந்தனையில் இருந்த குழப்பம் குறையும். பூர்வீக சொத்துகளால் விரயம் உண்டாகும். பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை வேண்டும். துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் பார்வை உள்ளது. திருமண வாழ்க்கை விரைவில் கூடிவரும். சிலருக்கு உடல் சூடு ஏற்படும், உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மன வருத்தம் மறையும். விருச்சிகம்: உங்களுக்கு அரசு வேலை கிடைப்பதறகான அத்தனை யோகமும் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் அமையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தனுசு: உங்கள் மனதில் நீண்ட காலமாக இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பணம் தொடர்பான வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வியாபார பணியில் வரவு உண்டாகும். மகரம்: இன்று நீங்கள் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக பேசவேண்டும். முடிந்தவரை கோவத்தை கட்டுப்படுத்த வேண்டும். திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். விடாமுயற்சியுடன் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். காதலர்கள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கும்பம்: ஆன்மீக பணியில் ஆர்வம் மேம்படும். வெளிநாடு பயணம் செல்லும் எண்ணம் கைகூடும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடி உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் சூழல் உருவாகும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படும். அதிகமாக கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். தாய்வழி உறவினர்களிடம் நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. மீனம்: இன்று உங்களுக்கு எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணியில் புதிய பொறுப்புகள் அதிகமாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். இழுபறியான சில விஷயங்களை முடிப்பீர்கள். காதலர்களுக்கு அருமையான ஒரு நாள் இன்று. தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி