இன்றைய ராசிபலன் 03-09-2023

68974பார்த்தது
மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்று இன்று கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரட வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் உங்களது முழு ஆற்றலையும் செலுத்த வேண்டும். பொழுதுபோக்கிற்கென சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் இன்று அமைதியாக இருந்தால் நல்லது. காரியங்களை சாதிக்க கடின உழைப்பு தேவை. ரிஷபம்: இந்த ராசிக்கார்கள் இன்று சௌகரியமாக உணர்வீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் பலனடைவீர்கள். இதனால் உங்கள் தன்னம்பிக்கை வளரும். இணக்கமான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது சாத்தியமாகும். திருமணமாகாதவர்களின் திருமணம் குறித்து முடிவெடுக்கும் நேரம். வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் மனதில் தெளிவு காணப்படும். இதனால் உங்கள் செயல்களை திறமையாக ஆற்ற இன்று நல்ல நாள். பொருத்தமான செயல்களை செய்து உங்கள் நிலையை மேம்படுத்த வாய்ப்பு உள்ளது. இனிமையான வார்த்தைகள் உங்களுக்கு பல நல்ல பலன்களை தரும்.பலவிதமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். காரியங்களை சாதிக்க கடின உழைப்பு தேவை. கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பதட்டமான சூழ்நிலை ஏற்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் அமைதி ஏற்படும். இன்று உங்களுக்கு ஏற்படும் கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு கவலை அளிக்கும். நிலம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தையின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிருப்தியான நிலை ஏற்படும். அனுசரணையான போக்கு உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். சிறந்த பலன் காண உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உங்கள் எதிர்காலத்திற்காக நீங்கள் திட்டமிட வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நல்ல நாள். பல வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். இந்த நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நாளின் பலன்கள் உங்களுக்கு திருப்தி அளிக்கும். திருமண விஷயத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். திரைப்படம் மற்றும் சீரியல் துறையில் பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் சாதகமாக நாளாக இருக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடிக்க முடியும். உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். மூதாதையர் சொத்துக்களால் பண ஆதாயம் உண்டாகும். விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று செயல்கள் சாதகமாக இருக்காது. இன்று அதிக பொறுப்புகள் காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத் துறையில் பணிபுரிபவர்கள் புத்திசாலித்தனமாக விஷயங்களைச் செய்ய வேண்டும். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. நீங்கள் சமநிலை இழப்பீர்கள். நற்பலன்கள் காண எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் இன்று சிறந்த பலன் அளிக்காது. மருத்துவத்துறையில் பணிபுரிபவர்களுக்கு பணப்பலன்கள் கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். முக்கிய இலக்குகளை அடைய திட்டமிட்டு செயல்பட வேண்டும். நீங்கள் எதிர்பார்த்ததை விட இன்று அதிகம் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல நாள். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலத்தின் கவனம் கொள்ள வேண்டும். கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. அஜாக்கிரதை மற்றும் கவனமின்மை காரணமாக உங்களுக்கு வளர்ச்சி அளிக்கும் சில மதிப்பு மிக்க வாய்ப்புகளை இழப்பீர்கள். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். திருமணமாகாதவர்களின் திருமணத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. பதட்டமான சூழ்நிலை கவலை அளிக்கும். நீங்கள் சில தடைகளை சந்திப்பீர்கள். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். சிறந்த வளர்ச்சி காண திட்டமிட்டு செயல்பட வேண்டும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். விண்ணப்பதாரர்களுக்கு சாதகமான பணிச்சூழல். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி