டிஎன்பிஸ்சி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என
பாஜக தலைவர்
அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கனமழையாலும், வெள்ளத்தாலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளது. இந்த மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழக அரசு தேர்வு பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் குறிப்பிட்ட தேர்வுகளை நடத்துவது முறையானதாக இருக்காது. எனவே ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வை மறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.