டி.என்.பி.எல். தொடர்: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

79பார்த்தது
டி.என்.பி.எல். தொடர்: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல் (நத்தம்) ,சென்னை ஆகிய நகரங்களில் நடக்கிறது. இந்நிலையில் முதல் 17 ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. paytm Insider என்ற இணைய தளம் மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். டிக்கெட் விலை ரூ.200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி