திருவள்ளூரை சேர்ந்த பிரியா (17) தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில் தேர்வு தொடங்கிய கடந்த மார்ச் 3-ல் அதிகாலை உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டார். வலி தாங்காமல் அலறிய பிரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். போலீசார் அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கும் நிலையில் அவர் 10-ஆம் வகுப்பில் 92% மதிப்பெண் பெற்றது தெரியவந்துள்ளது.