திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரகுமாயி தாயார் சமேத ஸ்ரீ பாண்டுரங்கன் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சுவாமி நீல நிறப்பட்டாடை உடைத்து தலைப்பாகை அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.