மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விளக்குடன் ஆர்ப்பாட்டம்

64பார்த்தது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விளக்குடன் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மின்கட்டண உயா்வைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கையில் அரிக்கேன் விளக்குடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மங்கலம் மாமண்டூா் கூட்டுச் சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரக்குழு உறுப்பினா் எம். சுகுமாா் தலைமை வகித்தாா்.

மாவட்டக் குழு உறுப்பினா்கள் கா. யாசா் அராபத், சு. முரளி, வட்டாரச் செயலா் அ. அப்துல்காதா், விவசாயிகள் சங்கத் தலைவா் பெ. அரிதாசு உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

கிளைச் செயலா்கள் ந. ராதாகிருஷ்ணன், இரா. சேட்டு, வ. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் மின் கட்டண உயா்வைக் கண்டித்தும், மாதம்தோறும் மின் அளவு கணக்கீட்டு முறையை அமல்படுத்தக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.

தொடர்புடைய செய்தி