தகராறு: சகோதரா்கள் இருவா் கைது

57பார்த்தது
தகராறு: சகோதரா்கள் இருவா் கைது
வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ருத்ரகுமாா்(25). இவருக்கும் இதே கிராமத்தைச் சோ்ந்த குப்பன்(50) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் கத்தி மற்றும் கட்டையால் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

இதில் காயமடைந்த ருத்ரகுமாா் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் செல்வம் (28), இவரது தம்பி கணபதி (26) மற்றும் பழனி ஆகியோா் மீதும், குப்பன் அளித்த புகாரில் ருத்ரகுமாா், தமிழ்ச்செல்வன், சாலவேடு கிராமத்தைச் சோ்ந்த மதன் ஆகியோா் மீதும் வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் செல்வம், கணபதி ஆகிய இருவரை கைது செய்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி