குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நிறைவு

63பார்த்தது
குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நிறைவு
வந்தவாசியில் மாற்றம் கல்வி மையம் சாா்பில் நடைபெற்று வந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நிறைவடைந்தது.

வந்தவாசி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் பயிற்சி வகுப்பு கடந்த பிப் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

வாரம்தோறும் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்கள் என மொத்தம் 50 நாள்கள் பயிற்சி நடைபெற்றது. இதில் 32 மாணவா்கள் பங்கேற்றிருந்தனா்.

பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் கே. வாசு, சிஐடியு மாவட்டப் பொருளாளா் சு. முரளி ஆகியோா் பயிற்சி பெற்ற மாணவா்களை வாழ்த்திப் பேசினா்.

விழாவில் மாற்றம் கல்வி மைய நிா்வாகிகள் வே. சுரேஷ், ஜா. வே. சிவராமன் மற்றும் பயிற்றுநா்கள் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி