வந்தவாசி: மதுப்பாட்டிகள் பதுக்கல்..போலீசார் அதிரடி

1881பார்த்தது
வந்தவாசி: மதுப்பாட்டிகள் பதுக்கல்..போலீசார் அதிரடி
வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா் நேற்று மாலை மழையூா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே இரு சக்கர வாகனத்துடன் சந்தேகப்படும்படி நின்றிருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் கரூா் மாவட்டம், வெ. பசுபதிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த வடிவேல்(48) என்பதும், புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்து இரு சக்கர வாகனத்தில் வைத்து அவா் விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதையடுத்து வடிவேலை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 200 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி