அப்துல் கலாம் நினைவு தின உரையரங்கம்

69பார்த்தது
அப்துல் கலாம் நினைவு தின உரையரங்கம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தின உரையரங்கம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சென்னாவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை த. சசிகலா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் வீரராகவன், வழக்கறிஞர் சா. இரா. மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஆ. மயில்வாகனன் பங்கேற்று ஆகலாம் கலாம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் கலாம் கண்ட கனவு என்ற தலைப்பில் மாணவர்களுக்கான பல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்றவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ. கேசவராஜ், கவிஞர் வங்கை சு. அகிலன், சமூக ஆர்வலர்கள் சையத் அலீம், ஜானகிராமன், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ. ஷாகுல் அமீது உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர். நிகழ்வில் மாணவர்கள் அப்துல் கலாம் உருவ முகமூடி அணிந்தும் மரியாதை செலுத்தினர். இறுதியில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

தொடர்புடைய செய்தி