இளநீர் பறிக்க முயன்றவர் தடுக்கி விழுந்து உயிரிழப்பு

66பார்த்தது
இளநீர் பறிக்க முயன்றவர் தடுக்கி விழுந்து உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பாதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 52 )விவசாயியான இவர் தந்தை தேசிங் வீட்டின் மொட்டை மாடியில் சுவர் மீது ஏறி வீட்டுக்கு அருகே இருந்த தென்னை மரத்தில் உள்ள இளநீர் பறிக்க முயன்றுள்ளார். அப்போது கால் தவறி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துத்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது ராஜசேகர் இறந்துவிட்டதாக கூறினார். அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் குப்புசாமி கீழ்க்கொடுங்காலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி