திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் வெங்கட்டபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் இன்று ஆடிக்கிருத்தியை முன்னிட்டு சுவாமிக்கு காலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.