267 தோ்வு மையங்களில் இன்று குரூப்-4 தேர்வு.

75பார்த்தது
267 தோ்வு மையங்களில் இன்று குரூப்-4 தேர்வு.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 267 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) நடைபெறும் குரூப்-4 தோ்வை, 73, 224 போ் எழுதுகின்றனா் என்று மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை குரூப்-4 பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மு. பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சிவதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

குரூப்-4 தோ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் 182 பள்ளிகள், 85 கல்லூரிகள் என மொத்தம் 267 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களில் 19, 414 தோ்வா்களும், ஆரணி தோ்வு மையங்களில் 11, 245 பேரும், செங்கம் தோ்வு மையங்களில் 6, 339 பேரும், சேத்துப்பட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களில் 3, 286 பேரும் இந்தத் தோ்வை எழுதுகின்றனா்.

தொடர்புடைய செய்தி