படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயிலில் சிறப்பு பூஜை.

55பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த படவேடு கிராமத்தில், அறநிலையத்துறைக்கு சொந்தமான, ரேணுகாம்பாள் அம்மன் கோயிலில் உள்ளது. இங்கு, அம்மன் சிரசு, சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், மூவரும் அரூபமாக அருள்பாலிக்கின்றனர்.


இக்கோயிலில், ஆடி மாதத்தில், 7 வாரங்களும் தொடர்ந்து ஆடி வெள்ளி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.


7 வாரமும் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆந்திரா, கர்நாடகா, மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வர். அம்மனை குலதெய்வமாக வழிபடும் பல்லாயிரக் கணக்கானோர், ஆடி மாதத்தில் வந்து பொங்கலிட்டு வழிபட்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி செல்வர் அதன் அடிப்படையில் ஆடி முதல் வெள்ளியான இன்று ரேணுகாம்பாள் அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரமும், அபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு ஆடு, கோழி உள்ளிட்டவைகளை நேர்த்திக்கடனாக செலுத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி