வாழை மரமானது தனது இலை, காய், பழம், தண்டு, கிழங்கு என அனைத்திலும் நல்ல குணங்களை கொண்டுள்ளது. அதில் முக்கியமானது வாழைத்தண்டு. வாழைத் தண்டை நாம் அடிக்கடி சாப்பிட்டால், செரிமானம் சீராக இருக்க உதவும். மேலும் இதில் வைட்டமின் B6 உள்ளதால் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். வயிற்றெரிச்சல், நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் வாரம் இரண்டு முறை வாழைத் தண்டை சாப்பிட்டு வருவது நன்மையை தரும்.