உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை (Lateral Entry) ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ஒன்றிய பாஜக அரசு பல்வேறு வடிவங்களில் இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கு முயற்சிப்பதால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். 50% இட ஒதுக்கீடு வரம்பை உடைத்து சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் சமூகநீதியை நிலை நாட்டுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.