திருவண்ணாமலை மாவட்டம் போளூர் புறவழி கூட்டுச்சாலை அருகே போளூர் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்தினர் போராட்டத்திற்கு போளூர் அனைத்து வியாபாரி சங்கங்கள் ஆதரவு தெரிவித்து முற்றிலும் கடை அடைப்பு நடத்தினர்.
போளூர் மற்றும் போளூர் புறவழி சாலை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன கடந்த சில மாதங்களிலேயே வாகன விபத்துகளில் சுமார் 10 இருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பௌர்ணமி மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோயிலை நோக்கி படையெடுக்க தொடங்குகின்றனர்.
ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வேலூர் மற்றும் போளூர் வழியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தங்களது சொந்த கார்களிலோ அல்லது வாடகை கார்களிலோ திருவண்ணாமலை நோக்கி குடும்பமாக வந்து செல்கின்றனர் மேலும் இதுபோன்று கோயில்களுக்கு வந்து செல்லும் பொழுது ஓட்டுநர்கள் கவனக்குறைவினாலும், தூக்க கலக்கத்திலும் எதிரே வரும் வாகனங்களின் மீது இடித்து விபத்தை ஏற்படுத்துகின்றனர்.
அவற்றை தடுக்கும் வகையில் பொதுமக்கள் ஒன்றிணைந்து போளூர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அகிம்சை வழியில் போராட்டம் நடத்தினர்