திருவண்ணாமலை சகலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்மாதிமங்கலத்தில் சுமார் 4, 560 அடி உயரம் கொண்ட பருவதமலை அமைந்துள்ளது.பருவதமலை மீது உள்ள மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயிலில் இன்று (அக்.,17) புரட்டாசி வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு செயய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அம்மன் வண்ணமலர்களால் பிரமாம்பிக்கை அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இந்நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.