திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பில் இன்று (செப்.,5) ஆசிரியர் தின விழாவில் நூறு சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் பள்ளி மாணவர்கள் பரிசு மற்றும் நினைவு பரிசு வழங்கினர். விழாவில் தலைமையாசிரியர் பாலாமணி, பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி முரளி, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.