தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை நேற்று (அக்.31) சிறப்பாக கொண்டாடப்பட்டது. பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் மக்கள் மகிழ்ந்தனர். இந்நிலையில், தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடித்ததாக கூறி சென்னையின் பல்வேறு பகுதிகளில் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீபாவளி நாளில் காலை 6.00 முதல் 7.00 மற்றும் மாலை 7.00 முதல் 8.00 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.