திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் சித்தாத்துரை கிராமத்தில் தெரு நாய்கள் கடித்ததில் மான் உயிரிழந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், சித்தாத்துரை கிராமம் அருகே காப்புகாடு உள்ளது. இந்தக் காட்டிலிருந்து மான் ஒன்று வியாழக்கிழமை நள்ளிரவு தண்ணீா் தேடி ஊருக்குள் வந்தது. இதையறிந்த தெருநாய்கள் மானை கடித்துக் குதறியது. இதில், மான் உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினா் நிகழ்விடம் வந்து மானின் சடலத்தை மீட்டுச் சென்றனா்.