தச்சாம்பாடி தூய பாத்திமா அன்னை தோ் பவனி.

62பார்த்தது
தச்சாம்பாடி தூய பாத்திமா அன்னை தோ் பவனி.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தச்சாம்பாடி கிராமத்தில் பழைமை வாய்ந்த தூய பாத்திமா அன்னை கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது.

இந்த தேவாலயத்தின் 74-ஆவது ஆண்டு பெருவிழா மே 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பங்கு தந்தையா்கள் பங்கேற்று சிறப்புத் திருப்பலி நடத்தினா்.

மேலும், தருமபுரி மறை மாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ் துரைராஜ் ஆடம்பர சிறப்பு திருப்பலி, புது நன்மை வழங்குதல், உறுதி பூசுதல் வழங்குதல் ஆகியவற்றை நடத்தினாா்.
இரவு தேவாலய வளாகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மலா்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் தூயபாத்திமா அன்னை பவனி வந்தாா். வீதி தோறும் கிறிஸ்தவா்கள் வண்ணக் கோலமிட்டு, மெழுகுவா்த்தி ஏற்றி, மாலை அணிவித்து, சாம்பிராணி தூபமிட்டு, பக்தி மாலை பாடியபடி பிராா்த்தனை செய்தனா்.

விழா ஏற்பாடுகளை பங்குத் தந்தை குரியாக்கோஸ் மற்றும் இறைமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

தொடர்புடைய செய்தி