சர்க்கரை நோயாளிகள் அரிசி பயன்பாட்டை குறைப்பது நல்லது. அதற்கு பதிலாக குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்ட பிரவுன் ரைஸ் சாப்பிடலாம். இது சர்க்கரையை மெதுவாக ரத்தத்தில் கலக்க அனுமதிக்கிறது. மேலும் பாஸ்மதி அரிசியும் குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸை கொண்டுள்ளது. அதேபோல் காட்டு அரிசி அதிக நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது. காய்கறி, சிக்கன் சூப்புகள், சாலட்டுகள் போன்றவற்றையும் அரிசி உணவுக்கு பதிலாக சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம்.