திருவண்ணாமலை மாவட்டம் போளூர் புறவழிச் சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அதிகப்படியான உயிரிழப்புகள் நேருகின்றன அவற்றை தடுக்கும் வகையில் போளூர் பொதுமக்கள் ஒன்றிணைந்து வெண்மணி கூட்டுச்சாலை அருகே போளூர் ரயில்வே மேம்பாலம் விரைந்து முடிக்க வேண்டியும், புறவழி சாலையில் பேரி கார்டு மற்றும் சென்டர் மீடியம் பொருத்தும் படியும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அகிம்சை வழியில் போராட்டம் நடத்தினர்.
இந்நிகழ்வில் போளூர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.