மணமக்களை வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின்

59பார்த்தது
மணமக்களை வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் அ. விஜயன் - நா. சங்கீதா இணையரின் திருமணத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இன்று குறிஞ்சி இல்லத்தில் நடத்தி வைத்தார்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் இருவரும் உதயசூரியனும் - உடன்பிறப்பும் போல நீடூழி வாழ்கவென வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக கட்சி நிர்வாகிகளும் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

தொடர்புடைய செய்தி