கோழி வளர்ப்பு திட்டம், பெண்களுக்கு அழைப்பு

65பார்த்தது
கோழி வளர்ப்பு திட்டம், பெண்களுக்கு அழைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில், கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 50 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தின்படி, ஒரு பயனாளிக்கு 40 கோழிக் குஞ்சுகள் வீதம் 4 வார கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும்.

ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 100 பயனாளிகள் வீதம் மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மொத்தம் 1, 800 பயனாளிகள் மட்டுமே இந்தத் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட உள்ளன.

இதில் பயன்பெற விரும்பும் பெண்கள், மக்களுடன் முதல்வா் திட்டம் முகாம்களில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம்,

ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட 60 வயதுக்கு உள்பட்ட பெண் பயனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். பயனாளி குறிப்பிட்ட ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். இதற்கான சான்றிதழ் இணைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

தொடர்புடைய செய்தி