மத்திய அமைச்சர் அமித்ஷா, விவசாயிகளுக்கு சில குறிப்புகளை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மாட்டுச் சானத்தை மட்டும் அல்லாமல், மாடுகளின் தோல் மற்றும் எலும்புகளைப் பதப்படுத்தி பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும். அவற்றை வணிகர்களுக்கு விற்பதற்கு பதிலாக, கூட்டுறவு சங்கங்கள் மூலம் பதப்படுத்தி, காலணி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்கலாம். அதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்” என அறிவுரை கூறியுள்ளார்.