திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட துரிஞ்சாபுரம் ஒன்றியம் பூதமங்கலம் கிராமத்தில் இன்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமினை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகரும், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான கு. பிச்சாண்டி நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு வந்த மக்களிடம் பெற பெற்ற தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார். இந்த முகாமில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.