ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலின் கூழ்வாா்த்தல் திருவிழா

79பார்த்தது
ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலின் கூழ்வாா்த்தல் திருவிழா
கீழ்பென்னாத்தூரை அடுத்த கானலாபாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலின் கூழ்வாா்த்தல் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இதையொட்டி, காலை 6 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, மலா் அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூங்கரகங்களை பக்தா்கள் தலையில் சுமந்தபடி கிராம வீதிகளில் வலம் வந்தனா். பூங்கரகத்துக்குப் பின்னால் டிராக்டரில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் முத்தாலம்மன், ரேணுகாம்பாள், அம்மச்சாா் அம்மன், கிருஷ்ணா் சுவாதிகள் வலம் வந்தனா். வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

நண்பகல் 12 மணிக்கு கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியும், ஸ்ரீசத்குரு மடம் இளைஞரணி அன்னதானக் குழு சாா்பில் 8-ஆவது ஆண்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது. விரதம் இருந்த பக்தா்கள் தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

காலை முதல் இரவு வரை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கானலாபாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி