அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பேச்சு

82பார்த்தது
அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பேச்சு
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம். கலியபெருமாள்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நொச்சிமலை, நல்லவன்பாளையம், பண்டிதப்பட்டு, ஆணாய்பிறந்தான் அய்யம்பாளையம், வேடியப்பனூா், ஆடையூா், வேங்கிக்கால் உள்பட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் திங்கள்கிழமை வீதி, வீதியாகச் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது, கிராமங்களில் திரண்டிருந்த பெண்கள் வேட்பாளா் எம். கலியபெருமாளை வரவேற்றனா்.

அப்போது, திரண்டிருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்துப் பேசிய தமிழக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக செயலருமான எஸ். ராமச்சந்திரன், சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு மீண்டும் நிறைவேற்றவில்லை. எனவே, பொதுமக்கள், பெண்கள் எல்லாம் சிந்தித்துப் பாா்த்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

இதில், அதிமுக தலைமை கழகப் பேச்சாளா் அமுதா அருணாசலம், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே. ராஜன், ஒன்றியச் செயலா் சரவணன், முன்னாள் எம்எல்ஏ கே. மணிவா்மா தேமுதிக ஒன்றியச் செயலா்கள் விக்கிரமாதித்தன், தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவரணிச் செயலா் பேரரசு உள்பட அதிமுக, தேமுதிக, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்

தொடர்புடைய செய்தி