கூட்டுறவு கடையில் ஆய்வு செய்த துணை சபாநாயகர்

53பார்த்தது
கூட்டுறவு கடையில் ஆய்வு செய்த துணை சபாநாயகர்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி, துரிஞ்சாபுரம் ஒன்றியம், மங்கலம் புதூரில் உள்ள கூட்டுறவு கடையை இன்று தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகரும், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பிச்சாண்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கூட்டுறவு கடையில் நுகர்வோர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து நுகர்வோர்கள் பொருட்களை வாங்கி செல்கிறார்களா, பயோமெட்ரிக் இயந்திரத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.
மேலும் பொது மக்களிடம் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி