நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை

52பார்த்தது
நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை
செங்கம் பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணி மும்பரம் 75 கிலாே எடை கொண்ட மூட்டை 2200 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பெருமளவு நெல் சாகுபடியே அதிக அளவில் நம்பி உள்ளனர் இந்நிலையில் இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அம்மன் நெல் 75 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல் 2200 ரூபாய் வரை விற்கபடுவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

மேலும் கடந்த சாகுபடியை காட்டிலும் இந்த சம்பா சாகுபடி செய்ததில் அறுவடை செய்ததில் மூட்டை ஒன்றுக்கு 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை கூடுதல் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

தற்போது நெல் அறுவடை செய்து வரும் விவசாயிகள் தனியார் கமிஷன் மண்டிகளில் அம்மன் ரக நெல் 2150 முதல் 2200 வரைக்கும் சோனால் ரக நெல் 1850 முதல் 1950 வரையிலும் குண்டு ரக நெல் 1500 முதல் 1600 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விரைவாக அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்தால் மேலும் கூடுதல் லாபம் கிடைக்கும் எனவும் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என செங்கம் பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி