திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஜூன் 10) முதல் நடைபெறும் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்களில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு சாா்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்கும் வகையில், ஆண்டுக்கு 2 முறை கோமாரி நோய்த் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் இப்போது கால் மற்றும் வாய்களில் ஏற்படும் கோமாரி நோய்க்கு தடுப்பூசி செலுத்தும் பணியின் 5-ஆவது சுற்று இன்று (ஜூன் 10) தொடங்குகிறது. இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணி ஜூலை 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.