விலையில்லா பாட நூல் வழங்கும் விழா

63பார்த்தது
விலையில்லா பாட நூல் வழங்கும் விழா
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதி, போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி துறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் பள்ளியிலேயே மாணவிகள் ஆதார் பதிவு முகாம் மற்றும் விலையில்லா பாட நூல் வழங்கும் விழா இன்று (10. 06. 2024) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு, ஆதார் முகாமை துவக்கிவைத்து, விலையில்லா பாட நூல்களை மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
உடன் வட்டார கல்வி அலுவலர் சுந்தர், பள்ளி தலைமை ஆசிரியை செ. சுதா, முன்னாள் சேர்மன், பொது குழு உறுப்பினர் ராஜன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் L. N. துரை, ஒன்றிய செயலாளர்கள் கே. சி. கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜ், எம். சி. அசோக் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி